2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

தேசிய கொடியை அவமதித்த குற்றச்சாட்டு: நால்வரும் விடுதலை

Kanagaraj   / 2013 பெப்ரவரி 10 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். திருநெல்வேலி பரமேஸ்வரா சந்தி பகுதியில் வைத்து தேசிய கொடியினை அவமதித்ததாக கூறப்படும்  குற்றஞ்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கொடியினை காலால் மிதித்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞர்கள் நால்வரையும் பொலிஸார் நேற்று மாலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களும் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அந்த நான்கு இளைஞர்கள் மீதும் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையில் அந்த நால்வரும் விடுவி க்கப்பட்டுள் ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை, சாவக்கச்சேரி மற்றும் சங்காணையை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--