2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

நல்லிணக்கத்திற்கு ஜப்பான் தொடர்ந்து உதவும்: தூதுவர்

Super User   / 2013 பெப்ரவரி 13 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றிற்கு ஜப்பான் தொடர்ந்து உதவும் என இலங்கை;கான ஜப்பானிய தூதுவர் நொப்ஹிடோ ஹோபோ தெரிவித்தார்.

ஜப்பானின் நிதியுதவியுடன் யாழ் போதனா வைத்திசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இந்த நிகழ்வில் ஜப்பான் தூதுவர் தமிழ் மொழியிலிலேயே உரையாற்றினார்.

இலங்கையுடன் ஜப்பான் கலை, கலாசாரம் மற்றும் பொருளாதார ரீதியில்  நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றது. இலங்கையின் அபிவிருத்தி பணிகளிலும் பாரிய பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றது என அவர் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையில் அபிவிருத்தி பணிகளோடு நின்றுவிடாது நல்லிணக்கம் எற்படவும் ஜப்பான் தொடர்ந்து உதவும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--