2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

கைத்தொழில் துறை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது: யாழ். அரச அதிபர்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 24 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாவட்டத்தில் கைத்தொழில் துறையானது அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

'மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு' எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு ஒன்று  யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது  யாழ். மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மாவட்டத்தின் அபிவிருத்தியில் கைத்தொழில் துறையானது முக்கிய பங்கு வகிக்கின்றது எனத் தெரிவித்த யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்,  யுத்தத்தின்போது கைத்தொழில் துறையானது  முற்றாக அழிவடைந்து விட்டதாகவும் கூறினார்.

ஆனாலும், தற்போது கைத்தொழில் துறையானது  கிராம மட்டங்களில் சிறு தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கைத்தொழில் துறையை  மேம்படுத்துவதற்கு கிராம மட்டங்களில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இதனால், கைத்தொழில் துறையானது அபிவிருத்தியில் முக்கிய பங்களிக்கின்றதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--