2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

சுதந்திரக் கட்சிக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 ஜூலை 28 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒழு குழுவினர் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் இன்று நண்பகல் இடம்பெற்றது.

வட மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த எம்.எம்.சீராஸிற்கு வேட்பாளர் பட்டியிலில் உள்ளடக்கப்பட்டாமைக்கு எதிராகவே இந்த போராட்டம் இடம்பெற்றது.

இதில் பெருமளவான முஸ்லிம் இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டுள்ளதுடன் புத்தூர், சிறுப்பிட்டி, சுன்னாகம் போன்ற பகுதிகளில் இருந்து மக்கள் பேரூந்துகள் மூலம் ஏற்றி வருப்பட்டு இந்த மறியல் போராட்டத்தில்  பங்கு பற்றி வருகின்றனர்.

இதில் கலந்துகொண்டவர்கள் "ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே" "வேண்டும் வேண்டும் எங்கள் அண்ணன் வேண்டும்" "பனை மரத்தில் வெளவலா எங்களுக்கே சவாலா" "இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா" போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த போராட்டத்தில் நீண்ட நேரம் வீதிப் மறியல் செய்யப்பட்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இந்த மறியல் போராட்டம் எதுவித முன் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட போதும் பொலிஸார் இதனைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X