2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

த.தே.கூ வின் வேட்புமனுத் தயாரிப்பு பணி நிறைவு: நாளை தாக்கல்

Kanagaraj   / 2013 ஜூலை 28 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத் ,சுமித்தி தங்கராசா


வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனுத் தயாரிப்பு பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்துள்ளன.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்த வேட்புமனு தயாரிக்கும் பணியில் கூட்டைப்பின் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் வருகை தந்து இந்த வேட்பு மனுத் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

வேட்பு மனுக்கள் நாளைய தினம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் வேட்புமனுக்களை  பரிசீலனை செய்வதற்கு கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன்  அங்கு வருகை தந்துள்ளதுடன் வேட்பாளர்கள் தொடர்பான விபரங்களையும் பரிசீலனை செய்துள்ளார்.

இதில், கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன்,செல்வம் அடைக்கலநாதன்,சிறிதரன்,மாவை சேனாதிராசா,சிவசத்தி ஆனந்தன் உட்பட கட்சியின் தலைவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்
  Comments - 0

  • AJ Monday, 29 July 2013 09:01 AM

    இவர்களை இப்படி பார்ப்பதுக்கு சந்தோசமாக இருக்கிறது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X