2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

கூட்டமைப்பின் வேட்பு மனு தாக்கல்

Kogilavani   / 2013 ஜூலை 29 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்

வடமாகாண சபை தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசு கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் வேட்பு மனுக்களை கையளித்தனர்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வவுனியாவிலும் கிளிநொச்சியிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

கட்சியின் ஏனைய வேட்பாளர்களான, தம்பிப்பிள்ளை தம்பிராசா, நடராசா விந்தன் கனகரட்ணம், எம்.சிவாஜிலிங்கம், தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட ஏனைய வேட்பாளர்கள் வேட்பு மனுவினை தாக்கல் செய்வதற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • AJ Monday, 29 July 2013 07:49 AM

    பெரும் வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெல்ல வேண்டும். தமிழர்கள் எல்லாம் தமிழ் தேசியத்துடன் இருக்கிறார்கள் என்பதை இலங்கைக்கும் உலகுக்கும் காட்டவேண்டும். புலம்பெயர் தமிழர்களும் தாங்களின் முழு ஆதரவை TNA க்கு இந்த நேரத்தில் வழங்கி பெரும் வெற்றி பெற உதவிட வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X