2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவோம்: இரா.சம்பந்தன்

Kogilavani   / 2013 ஜூலை 29 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, நா.நவரத்தினராசா

'தேர்தல் திகதிக்கு 6 வாரத்திற்கு முன்னர் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும்' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தழிழரசு கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'தற்போது வேட்பாளர் நியமனங்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. எதிர்வரும் வியாழக்கிழமை நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த பின்னரே, தேர்தல் பத்திரங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

அதற்கு பின்னர் தேர்தல் திகதி அறிவிக்கப்படும்.

அதேவேளை, தேர்தல் திகதிக்குள் 6 வாரத்திற்கு முன்னர் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டு மக்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். மக்கள் அவற்றினை வாசித்து நன்கு அறிந்து கொள்வதற்கான கால அவகாசம் வழங்கப்படும்' என்றும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X