2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

தமிழ்ச்செல்வனின் உறவினரும் போட்டி

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்


தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வனின் உறவினரான அருளம்பலம்  பாலகிருஷ்ணன் வடமாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

வடமாகாண சபைத்தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் அவர் போட்டியிடவுள்ளார். இவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்திருந்தும் அவருடைய விண்ணம் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 

இதேவேளை முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சோ தலையமையிலான ஜனநாயக் கட்சி இன்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் வேட்புமனு  தாக்கல் செய்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இருந்து புறக்கணிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து சுயேட்சை குழுவான வேட்பு மனுக்களை தாக்கல்செய்துள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--