2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

இரு கோவில்களில் இரு இயந்திரங்களும் வீட்டில் ஆடும் திருட்டு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 20 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கனகராஜ்

யாழ்.புலோலி புற்றளை பிரதேசத்தில் அமைந்திருக்கும் இரு கோவில்களில்களிள் நீர் இறைக்கும் இயந்திரங்கள் இரண்டும், வீடு ஒன்றில் ஆடு ஒன்றும் திருடப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை (19) இரவு இடம்பெற்ற இச்சம்பவங்கள் பற்றி மேலும் தெரியவருவதாவது,

மேற்படி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் கட்டப்பட்டிருந்த 15 ஆயிரம் பெறுமதியான ஆடு ஒன்றினை கன்ரர் வாகனத்தில் வந்தவர்கள் திருடிக் கொண்டு செல்வதினை வீட்டின் உரிமையாளர் கண்டபோதும், கன்ரர் வாகனம் விரைந்து சென்று விட்டது.

தொடர்ந்து அப்பிரதேசத்திற்கு அண்மையிலுள்ள வடுவாவத்தை வீரபத்திரர் ஆலயம் மற்றும் தோட்டத்து ஞானவைரவர் ஆலயங்களின் நீர் இறைக்கும் இயந்திரம் இரண்டும் களவாடப்பட்டன. ஒரே இரவில் நடந்த இத்திருட்டுக்களை கன்ரர் வாகனத்தில் வந்தவர்களே மேற்கொண்டு இருக்கலாமென அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்திருந்தனர்.

இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--