2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

யாழ்.செம்மணி பகுதியில் கண்டன போராட்டம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா, அலேசியஸ் நிதர்சன்


யாழ்.செம்மணி பகுதியில்; கண்டனப் போராட்டம் ஒன்று  வியாழக்கிழமை (24) பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.நாச்சிமார் கோவிலடியில் கடந்த வியாழக்கிழமை (17) கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் நோக்கிலும் யாழ். பெண்கள் அமைப்புக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தன.

ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்,  'பெண்களுக்கெதிரான வன்முறையற்ற சமூகத்தை ஆக்குவோம்', 'உன்னைப் படைக்கும் பெண்ணைச் சிதைக்காதே', 'பாலியல் பயங்கரக் கொலைகளை எப்போதும் இல்லாமல் செய்வோம்'இ போன்ற வாசகங்கள் கொண்ட பதாதைகளை தாங்கியவாறு இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
  Comments - 0

  • Simon Wednesday, 30 October 2013 09:39 AM

    உன்னைப் படைக்கும் பெண்ணைச் சிதைக்காதே

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--