2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

வாள்களுடன் ஆட்டோவில் சென்ற நால்வர் கைது

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 07 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்
 
முச்சக்கர வண்டியில் வாள்களுடன் சென்ற நால்வரை அச்சுவேலிப் பொலிஸார் இன்று (07) அதிகாலை கைதுசெய்துள்ளனர்.
 
இணுவில் காரைக்கால் கோவிலடியினைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அச்சுவேலி சந்தியில் வீதிப்போக்குவரத்து கடமையிலிடுபட்டிருந்த அச்சுவேலி பொலிஸார், முச்சக்கரவண்டியொன்றினை மறித்துச் சோதனையிட முற்பட்டவேளை, முச்சக்கரவண்டி நிற்காமல் சென்றுள்ளது. அந்த முச்சக்கர வண்டியினைத் துரத்திச் சென்று பிடித்த பொலிஸார், முச்சக்கர வண்டியினைச் சோதனையிட்ட போது, அதனுள் வாள்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதில் பயணம் செய்த நால்வரும் மதுபோதையில் இருந்துள்ளனர்.
 
நால்வரையும் கைது செய்த பொலிஸார், முச்சக்கர வண்டியினையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
 
மேற்படி நான்கு நபர்களையும் மல்லாகம் நீதிமன்ற நீதிபதி பசீர் மொஹெமட்டின் வாசஸ்தலத்தில் இன்று (07) ஆஜர்ப்படுத்தவுள்ளதாக அச்சுவேலி குற்ற ஒழிப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .