2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

பனை முறிந்ததினால் மின்சாரம் இல்லாமலிருக்கும் சுன்னாகம் கிழக்கு பகுதி

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 07 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா
 
பனைமரம் ஒன்று முறிந்து மின்சார கம்பிக்கு மேல் வீழ்ந்ததினால் மின்சாரம் இல்லாமல் இருக்கிறார்கள் சுன்னாகம் கிழக்கு பகுதி மக்கள்.
 
யாழில் நேற்று முன்தினம் (05) இரவு வீசிய காற்றில் மேற்படி பகுதியிலுள்ள பனை மரம் ஒன்று முறிந்து மின்சார கம்பிகளின் மேல் வீழ்ந்ததினால் மின்சாரக் கம்பிகள் அறுந்தன.
 
மின்சார சபையின் பாரம்தூக்கி பழுதடைந்ததினால் முறிந்த பனை மரத்தினை அகற்றும் நடவடிக்கை தாமதமாகி வருகின்றது.
 
இதனால் நேற்று முன்தினம் தொடக்கம் அப்பகுதியில் மக்கள் மின்சாரம் இல்லாமல் இருக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--