2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

ஓடு பிரித்து வீட்டில் திருட்டு

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 07 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அலோசியஸ் நிதர்சன்
 
உரும்பிராய் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு (06) வீட்டின் கூரை ஓட்டினைப் பிரித்து உள்நுழைந்து அங்கிருந்த 4 பவுண் சங்கிலி மற்றும் 27 ஆயிரம் ரூபா பணம் என்பன திருடப்பட்டுள்ளன.
 
உரும்பிராய் கிழக்கு கற்கோவளம் பகுதியிலுள்ள வீடொன்றிலே இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
வீட்டிலிருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இடம்பெற்ற இத்திருட்டு தொடர்பாக காலையில் எழுந்த போதே வீட்டு உரிமையாளர்கள் அறிந்தனர்.
 
இது தொடர்பாக வீட்டு உரிமையாளர்களினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--