2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

உயிர் நீத்த இராணுவ வீரருக்கு ஆனையிறவில் உருவச்சிலை

Super User   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


தமிழீழ விடுதலை புலிகளுடனான மோதலில்  உயிரிழந்த இராணுவ வீரர் ஒருவருக்கு ஆனையிறவு பகுதியில் உருவச்சிலையொன்று நிர்மாணிக்கப்படுகின்றது. இந்த உருவச்சிலை இராணுவத்தினராலே நிர்மாணிக்கப்படுகின்றது.

1991ஆம் ஆண்டு  விடுதலை புலிகளால் ஆனையிறவு படைத்தளத்தை தகர்ப்பதற்கான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இந்த தளத்தினை அழிக்கும் நோக்கில் வெடிமருந்து நிரப்பட்ட டாங்கி ஒன்று புலிகளினால் அனுப்பப்பட்டது.

குறித்த அந்த டாங்கியினை காமினி குணரத்தன எனும் இராணுவச் சிப்பாய் தட்டுவன் கொட்டி பகுதியில் தடுத்தி நிறுத்தி உயிரிழந்துள்ளார். இந்த இராணுவ வீரரின் ஞாபகார்த்தமாக டாங்கி  தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--