2021 மார்ச் 01, திங்கட்கிழமை

சைவப் புலவர் சங்கத்தின் சைவப் புலவர் பரீட்சைகள்

Kogilavani   / 2014 மார்ச் 24 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் சைவப்புலவர் பரீட்சைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18, 19, மற்றும் 20 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, கொழும்பு மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட இடங்களில் நடைபெறவுள்ளதாக அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை ஞாயிற்றக்கிழமை (23) தெரிவித்தார்.

அகில இலங்கை சைவபப்புலவர் சங்கத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் இந்தப் பரீட்சைகளில் இவ்வருடமும் இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப் புலவர்களுக்கான பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

யாழ்ப்பாணம் வண்ணை நாவலர் மகாவித்தியாலயம், மட்டக்களப்பு ஆனைப்பந்தி பெண்கள் கல்லூரி, திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி, மற்றும் பிரித்தானியா ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள இந்தப் பரீட்சைகளுக்கு மொத்தமாக 165 பேர் தோற்றவுள்ளனர்.

அதனடிப்படையில், யாழ்ப்பாணத்தில் 50 பேர் இளஞ்சைவப்புலவர் பரீட்சைக்கும், 11 பேர் சைவப்புலவர் பரீட்சைக்கும், மட்டக்களப்பில் 50 பேர் இளஞ்சைவப்புலவர் பரீட்சைக்கும்  19 பேர் சைவப்புலவர் பரீட்சைக்கும், திருகோணமலையில் 7 பேர் இளஞ்சைவப்புலவர் பரீட்சைக்கும், 7 பேர் சைவப்புலவர் பரீட்சைக்கும், கொழும்பில் 8 பேர் இளஞ்சைவப்புலவர் பரீட்சைக்கும் 10 பேர் சைவப்புலவர் பரீட்சைக்கும், பிரித்தானியாவில் ஒருவர் இளஞ்சைவப்புலவர் பரீட்சைக்கும், 2 பேர் சைவப்புலவர் பரீட்சைக்கும் தோற்றவுள்ளதாக சம்பந்தப்பிள்ளை மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .