2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

மனித உரிமைகள் கற்கையை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 27 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


மனித உரிமைகள் நிலையத்தின் ஏற்பாட்டிலான 03  மாத மனித உரிமைகள் கற்கைநெறியை  பூர்த்தி செய்த 25 பேருக்கு  புதன்கிழமை (26) சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

குருநகரிலுள்ள மனித உரிமைகள் நிலையத்தில் மனித உரிமைகள் நிலையத்தின் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். மாவட்ட ஓய்வுபெற்ற நீதிபதி மு.திருநாவுக்கரசுவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ், சட்டத்தரணி அ.அற்புதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இக்கற்கைநெறி கடந்த 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்தது.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .