2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

கிணறுகள் கணக்கெடுப்பு

Kanagaraj   / 2014 மார்ச் 27 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ் மாவட்டத்திலுள்ள விவசாயக் கிணறுகள் பற்றிய தரவுகளைப் பதிவுசெய்யும் நடவடிக்கையில் வடமாகாண விவசாய அமைச்சு ஈடுபட்டுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் வியாழக்கிழமை (27) தெரிவித்தார்.

இது தொடர்பாக விவசாய அமைச்சரினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் செறிவு வேளாண்மையினால் அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகின்றது. விவசாயத்திற்கு அதிகளவு இரசாயனங்கள் பிரயோகிக்கப்படுவதால் நிலத்தடி நீர்வளம் பாதிப்படைய  ஆரம்பித்திருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் உள்ளதைப்போன்று யாழ்ப்பாணத்தில் ஆறுகளோ, பெரும் குளங்களோ இல்லாத நிலையில் கிணறுகளில் இருந்தே விவசாயத்துக்குத் தேவையான நீர் பெற்றுகொள்ளப்படுகின்றன.

வழங்கி வருகின்றன. யாழ் மாவட்டத்தில் இத்தகைய விவசாயக் கிணறுகள் அண்ணளவாக 25,000 வரையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளபோதும் இவை பற்றிய முழுமையான தரவுகள் இதுவரையில் தரவேற்றம் செய்யப்படவில்லை.

அதிக எண்ணிக்கையான விவசாயக் கிணறுகள் சீராகப் பராமரிக்கப்படாமையால் மேற்கட்டு மற்றும் உட்பக்கச் சுவர்கள் அழிவடைந்தும் உள்ளன. யாழ் மாவட்டத்தின் நீர் வளத்தின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஆய்வுகளுக்கும் திட்டங்களுக்கும் விவசாய கிணறுகளின் கட்டுமானப் பரிமாணங்கள், கிணறுகளிலுள்ள நீரின் அளவு, நீரின் தன்மை உட்படப் பல்வேறு தரவுகள் அவசியமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .