2021 மார்ச் 04, வியாழக்கிழமை

மின்சாரம், குடிநீர் விநியோகம் உள்ளிட்டவை தொடர்பில் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 30 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். தீவகத்தின் வேலணை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுகளில் 'வடக்கின் வசந்தம்' திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அமைச்சரின் செயலகத்தில் சனிக்கிழமை (29) நடைபெற்றது.

இதன்போது, வேலணை மற்றும் ஊர்காவற்றுறை பகுதிகளில் முன்னெடுக்கப்படும் மின்சார விநியோகம் தொடர்பில் துறைசார்ந்தோரிடம் அமைச்சர்  கேட்டறிந்தார். 

மின்சாரம் இல்லாத இடங்களுக்கு மின் இணைப்பை வழங்குவது, வீதிகளுக்கு மின்விளக்குகள் பொருத்துவது மற்றும் தற்போது வறட்சி நிலவுவதால் மேற்படி இரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் குடிநீர் பிரச்சினைக்கு  தீர்வு காண்பது ஆகியவை  தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன.
இந்நிலையில், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன.

அத்துடன் வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு ஆகிய பிரதேச சபைகளின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட விசேட நிதியொதுக்கீட்டின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் தொடர்பிலும்; துறைசார்ந்தோரிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

மேலும், இது தொடர்பில் அனுமதிக்கப்பட்ட வேலைகளில் நிறைவு செய்யப்பட்டவை மற்றும் செய்ய வேண்டிய வேலைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. 

செய்யப்பட வேண்டிய வேலைகளைத் துரிதப்படுத்தும் அதேவேளை, முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலில் 'வடக்கின் வசந்தம்' திட்டப் பணிப்பாளர் எஸ்.குணசீலன், வேலணை பிரதேச செயலர் மஞ்சுளாதேவி சதீஸன், ஊர்காவற்றுறை பிரதேச செயலர் எழிலரசி அன்ரன் யோகநாயகம், வேலணை பிரதேச சபைத் தவிசாளர் சிவராசா (போல்), ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.ஜெயகாந்தன், அமைச்சரின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி.குகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .