2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

வாள்வெட்டு: இரு இளைஞர்கள் வைத்தியசாலையில்

Kogilavani   / 2014 ஏப்ரல் 04 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச்    சம்பவத்தில்    இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த    நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் வெள்ளிக்கிழமை (04) தெரிவித்தனர்.

சிறுப்பிட்டியினைச் சேர்ந்த மார்க்கண்டு மயூரன் (28) சந்திரன் மதுசுதன் (24) ஆகிய இருவருமே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாழைக்குலை விற்பனை செய்வது தொடர்பில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த வாள்வெட்டுச் சம்பவத்திற்குக் காரணம் என ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .