2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

விபத்தில் ஐவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

யாழ். கைதடி நுணாவிலில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த 05 பேர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வந்துகொண்டிருந்த  காரொன்று  வேகக் கட்டுப்பாட்டை இழந்து, கைதடியிலிருந்து சாவகச்சேரிக்குச் சென்றுகொண்டிருந்த சிறிய ரக உழவு இயந்திரத்தின் பின்பக்கமாக மோதியதால் இவ்விபத்து சம்பவித்ததாகவும் பொலிஸார் கூறினர்.

திங்கட்கிழமை (07) இரவு இடம்பெற்ற இவ்விபத்தின்போது சிறிய ரக உழவு இயந்திரத்தில் சென்ற மட்டுவிலைச்  சேர்ந்த தனபாலசிங்கம் தர்மகுலசிங்கம் (வயது 43) பொன்னன் தேவராஜா (வயது 62) ஆகியோரும் காரில் சென்ற  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நடராஜா தமிழ் அழகன் (வயது 43), மட்டுவிலைச்  சேர்ந்த கனகலிங்கம் திவாகர் (வயது 26), கிருஸ்ணன் நிரோஜன் (வயது 21) ஆகியோரும்  படுகாயமடைந்தனர்.

இவ்விபத்தின்போது  சேதமடைந்த கார் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--