2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

நீர்வேலியில் சேதனமுறை மாதிரிப்பண்ணை திறப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 12 , மு.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


நீர்வேலி மேற்குப் பகுதியில் சேதனமுறை மாதிரிப்பண்ணையொன்றினை வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

யாழ் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயத்தில் அதிகளவில் விவசாய உரங்களும், பூச்சிகொல்லிகளும், பெருமளவு நீரும் பயன்படுத்தப்படுகிறது.

இதனால் நிலத்தடிநீர் விவசாய இரசாயனங்களால் மாசடைந்து வருவதோடு நிலத்தடிநீரின் அளவும் குறைந்து வருகிறது. மேலும், விவசாய இரசாயனங்கள் உணவுடன் உடலைச் சென்றடைவதால் மனிதர்களின் தேக ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தடுக்கும் முகமாகவே மேற்படி சேதனமுறை மாதிரிப் பண்ணை திறந்து வைக்கப்பட்டதாக வடமாகாண விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

யாழ் குடாநாட்டின் நீர்வளத்தைக் காப்பாற்றுவதோடு ஆரோக்கியமான வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும் விவசாய இரசாயனங்களைப் பயன்படுத்தாத, இயற்கை விவசாயமான சேதன விவசாயத்துக்கு நாம் திரும்புவது அவசியமாகும். இதனடிப்படையிலேயே  அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பு   என்னும் அரசசார்பற்ற  நிறுவனம் சேதன விவசாயத்தை ஊக்குவித்து வருகின்றது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இம்மாதிரிப் பண்ணையைத் தொடர்ந்து விரைவில் வல்லையில் பத்து ஏக்கர் அளவில் சேதன முறையிலான பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக சொண்ட் நிறுவனத்தின் தலைவர் ச.செந்துராஜா தெரிவித்தார். இந்நிகழ்வில் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--