2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

சிவதீட்சை வழங்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -ஐ.நேசமணி


சைவ மகா சபை, சைவ நெறிக்கூடம், தெய்வத் தமிழ் அறக்கட்டளை ஆகியன இணைந்து நடத்துகின்ற கிராமிய அருட்சுனைஞர் (தமிழ் அர்ச்சகர்) பயிற்சி நெறியில் பங்குபற்றுகின்ற மாணவர்களுக்கு சிவதீட்சை வழங்கும் நிகழ்வு சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை (18) நடைபெற்றது.

இதன்போது தமிழ் அருட்சுனைஞர்கள் உட்பட 34 பேர் தமிழில் சிவதீக்சை பெற்றுக்கொண்டனர்.

இந்தியாவிலிருந்து வருகை தந்து மாணவர்களுக்கு விரிவுரைகளை நிகழ்த்துகின்ற செந்தமிழ் வேள்விச் சதுரர் சத்தியவேல் முருகனார் இவர்களுக்கான சிவதீட்சையை வழங்கிவைத்தார்.

தீட்சை வழங்கும் நிகழ்விற்கு முன்னர் விசேட யாகமும் இடம்பெற்றது. இந்த நிகழ்வுகளில் யாழ்.குடாநாட்டின் பல இடங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--