2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

கட்டாயப்படுத்தி இராணுவத்தில் எவரையும் இணைக்கவில்லை: உதய பெரேரா

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

இராணுவத்திற்கு விருப்பத்தின் அடிப்படையில் பலர் தற்போது இணைந்து கொள்கின்றனர். விரும்பியோர் இணைந்துகொள்ளலாம். கட்டாயப்படுத்தி எவரையும் இணைத்துக்கொள்ளவில்லை. அதோடு, தேவையேற்படின் இராணுவத்திலிருந்து வெளியேறவும் முடியும் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரரா தெரிவித்தார்.

யாழ். தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கோடைத் திருவிழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய உதய பெரேரா, 'இராணுவம் இன்று தொழிற் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது. தொழிற்பயிற்சி பெற்றவர்கள் இராணுவத்துடன் இணைந்து செயற்படுகின்றார்கள்' என்றார்.

'1980ஆம் ஆண்டு காலம்வரை உயர்மட்ட பயிற்சிகள் பெற்றவர்களே இராணுவத்தின் இணைக்கப்பட்டனர். ஆனால் தற்போது அவ்வாறில்லை. கல்வித் தகைமையுள்ளவர்களை இராணுவத்தில் இணைத்து உரிய பயிற்சிகளை வழங்குகின்றோம்.

இராணுவத்தில் இணைந்து பயிற்சிபெற்ற பின், தேவையேற்படின்  இராணுவத்தில் இருந்து வெளியேறவும் முடியும். விரும்பியே படைப்பிரிவில் இணைந்துகொள்ள வேண்டும். எவரையும் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் நாம் இணைத்துக்கொள்ளவில்லை.

பயிற்சியளிக்கப்பட்டவர்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் ஆரம்பித்த பின்பு தொழில் வழங்குவோம். இவ்வாறு இணைக்கப்படுபவர்களுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபா சம்பளத்துடன் மருத்துவச் செலவு, குடும்பத்திற்கான செலவு போன்ற கொடுப்பனவுகளும் வழங்கப்படும்' என்றார்.
 
இந்த திட்டத்தின் நோக்கம் எமது நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதாகும். விருப்;பத்தின் பேரில் இணைந்து தொழில்வாய்ப்பினை பெற முடியும்.  அவ்வாறு இணைவதன் மூலம் தங்களது பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ள முடியும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும் அதிகரிக்கச்செய்ய முடியும்.

எமக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக நாம் இணைந்து செயற்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது' என்று உதய பெரேரா குறிப்பிட்டார்.

'நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெருமளவு  நிதியினை வழங்கி வருகின்றார். மேலும் அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களது ஒத்துழைப்பும் அவசியமாகும். வெளிநாட்டு முதலீட்டாளர்களும் உள்நாட்டு முதலீட்டாளர்களும் இணையும் போதுதான் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி நாட்டை அபிவிருத்தியின் பாதையில் கொண்டுசெல்ல முடியும்.

இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தொழில்நுட்பக் கல்லூரிகள் சாத்தியமனதாக அமைந்துள்ளன. இந்த கல்லூரிகளிலிருலுந்து வருடாந்தம் 850பேர் பயிற்சிகள் பெற்று வெளியேறுகின்றனர்' என்றார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு வருவது தொழில் வாண்மையினை வளர்த்துக் கொள்வதற்காகும். இதனை இளைஞர் யுவதிகள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என யாழ். கட்டளைத் தளபதி மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X