2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

வாள்வெட்டில் குடும்பஸ்தர் காயம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ். மீசாலை பகுதியில் வாள்வெட்டுக்கு உள்ளாகி படுகாயமடைந்த மீசாலை வடக்கைச் சேர்ந்த சின்னராஜா சிவானந்தமூர்த்தி (வயது 34) என்ற குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (20) மதுபோதையில் அட்டகாசம் புரிந்தவர்களை தடுப்பதற்குச் சென்றபோதே மேற்படி குடும்பஸ்தர் வாள்வெட்டுக்கு உள்ளானதாகவும் பொலிஸார் கூறினர்.

குறித்த பகுதியிலுள்ள விளையாட்டுக்கழகமொன்றின்  மைதானத்திலிருந்த கரப்பந்தாட்ட வலையை மதுபோதையில் காணப்பட்ட சிலர் அறுத்தெறிந்ததுடன், மின்குமிழ்களையும் அடித்து நொருக்கிக்கொண்டிருந்தனர்.

இதனை தடுப்பதற்குச் சென்ற மேற்படி குடும்பஸ்தர் மீது  மதுபோதையிலிருந்தவர்கள் வாளால் வெட்டியுள்ளனர்.  இதில்  படுகாயமடைந்த குடும்பஸ்தர் உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர்  மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்;.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--