2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

வியாபார நிலையத்தில் திருட்டு : இருவர் கைது

Super User   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

நாவாந்துறை மீன்சந்தைக்கு முன்னாலுள்ள வியாபார நிலையமொன்றினை உடைத்துத் திருடிய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் அதேயிடத்தினைச் சேர்ந்த இருவரை திங்கட்கிழமை (21) கைது செய்துள்ளதாக யாழ்.குற்றத்தடுப்புப் பொலிஸார் இன்று (22) தெரிவித்தனர்.

மேற்படி வியாபார நிலையத்தின் கதவினை திங்கட்கிழமை (21) அதிகாலை உடைத்த திருடர்கள் அங்கிருந்த 16260 ரூபா பணத்தினைத் திருடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் வியாபார நிலையத்தின் உரிமையாளர் யாழ்.குற்றத் தடுப்புப் பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து விசாரணைகளினை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இருவரை திங்கட்கிழமை (21) கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை யாழ்.மார்ட்டீன் வீதியில் உள்ள வீடொன்றின் கதவு கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) பகல் உடைத்து அங்கிருந்த 3 இலட்சத்து 99 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான வீட்டு உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.குற்றத் தடுப்புப் பொலிஸார் இன்று (22) தெரிவித்தனர்.

வீட்லிருந்தவர்கள் ஈஸ்ரர் தொழுகைக்காக தேவாலயம் சென்றிருந்த வேளை இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளினை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
;


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--