2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

விபத்திற்குள்ளானவரை பார்த்துக்கொண்டு சென்றவர் விபத்திற்குள்ளானார்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி,சுமித்தி தங்கராசா

யாழ். நீர்வேலிப் பகுதியில் விபத்திற்குள்ளானவரை  பார்த்துக்கொண்டு சென்றுகொண்டிருந்த நாவாந்துறையைச் சேர்ந்த எஸ்.துசிகரன் (வயது 26) என்பவர் தரித்துநின்ற  வானுடன்  மோதி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை (22)  பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கன்டர் ரக வாகனமொன்று நீர்வேலிப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் கீழே விழுந்து  சிறிய காயத்துக்குள்ளானார்.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் கீழே விழுந்ததை பார்த்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில்  சென்றுகொண்டிருந்த மேற்படி நபர்  நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு முன்பாக தரித்து நின்ற  வானுடன் மோதி விபத்திற்குள்ளானதாகவும் பொலிஸார் கூறினர்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X