2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

முகமாலையில் எலும்புக்கூடு

Super User   / 2014 ஜூலை 02 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


யாழ். முகமாலைப் பகுதியில் எலும்புக்கூடொன்று இன்று புதன்கிழமை (02) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கலோரெஸ்ட் நிறுவனத்தின், மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுவரும் பணியாளர்கள், கைவிடப்பட்ட காவலரண் அமைந்திருந்த பகுதியில் பணிகளை மேற்கொள்ளும் போதே மேற்படி எலும்புக்கூடு இருப்பதை அவதானித்து தமக்குத் தெரிவித்ததாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்வில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

யுத்தத்தின் போது சண்டை இடம்பெற்ற பகுதியிலேயே மேற்படி எலும்புக்கூடு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இராணுவப்பேச்சாளர் விளக்கம்

முகமாலையில் எலும்புக்கூடுகள் மீட்கப்படுவதாக வெளியாக தகவல்கள் தொடர்பில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை  காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய விளக்கமளிக்கையில்,

வடக்கை பொறுத்தவரையில்,  உயிர்களும் உடமை சேதங்களும் கூடுதலாக இடம்பெற்ற பகுதியே முகமாலையாகும். கொழும்பு-7 இலுள்ள ஒரு பேர்ச் காணியின் பெறுமதி, முகமாலையில் ஒரு பேர்ச் காணியில் ஏற்பட்ட உயிர் மற்றும் உடமை இழப்புகளுக்கு  சமமானதாகும் என்று அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தளவிற்கு அவ்விடத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன. அங்கு எலும்பு கூடுகள் மீட்கப்படுகின்றமை தொடர்பில் பொலிஸாரிடமே கேட்கவேண்டும் என்றார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .