2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கு குடிநீர்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 03 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எஸ்.குகன்


தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கம் மற்றும் நாவலர் நற்பணி மன்றத்தின் 100,000 ரூபா  நிதியுதவியில் யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கல் நடவடிக்கை புதன்கிழமை (02) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

நாவலர் நற்பணிமன்றத் தலைவர் ந.கருணை ஆனந்தன் மேற்படி குடிநீர்; வழங்கலை ஆரம்பித்துவைத்தார்.

இந்நிகழ்வில் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சு.சுகிர்தன், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி மு.உமாசங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .