2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

வீதி புனரமைத்த பின்னர் பழக்கடைகள் அமைக்கப்படும்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 03 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


- சொர்ணகுமார் சொரூபன்


யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு பின்னாலுள்ள பழக்கடைகள் தற்காலிகமாக அகற்றப்பட்டு வீதி புனரமைப்பு பணிகள் முடிவடைந்த பின்னர்,  அவ்விடத்தில் மீண்டும் அக்கடைகள் அமைக்கப்படும் என யாழ். மாநகரசபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் இன்று வியாழக்கிழமை (03) தெரிவித்தார்.

பழக்கடைகள் அமைந்துள்ள வீதி புனரமைக்க வேண்டியுள்ளதால், வீதியோரத்தில் பழங்கள் காட்சிப்படுத்தும் தட்டுக்களை அகற்றுமாறு பழ வியாபாரிகளுக்கு யாழ். மாநகரசபையால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர்  கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இதற்கிணங்க அப்பகுதியிலுள்ள 28 பழக்கடை வியாபாரிகளும் கடைகளில் பழங்கள் காட்சிப்படுத்தும் தட்டுக்களை அகற்றியிருந்தனர். இருப்பினும், கடைகளை முழுமையாக அகற்றுமாறு  வியாழக்கிழமை  (03) அங்கு வந்த மாநகர பணியாளர்கள் கூறினார்கள்.

இதனால் குழப்பமடைந்த பழ வியாபாரிகள், தற்போது பழங்களின் விற்பனைக்காலம் என்றும் விற்பனை அதிகமுள்ள இந்நேரத்தில், பழ வியாபாரத்தைக் கைவிட முடியாது எனக் கூறி மறுத்துள்ளனர். இதனால், மாநகரசபை ஊழியர்களுக்கும்  பழ வியாபாரிகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

இது தொடர்பாக யாழ். மாநகர ஆணையாளரிடம்  கேட்டபொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்படி வீதியில் 28 பழக்கடைகள் இருப்பதுடன், ஒவ்வொரு பழக்கடைக்கும் நாளாந்தம் 114 ரூபா படி மாநகர சபையினால் வாடகை அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .