2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

சிவில் பாதுகாப்பு விருந்தினர் விடுதி திறப்பு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 21 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பாதுகாப்பு அமைச்சின் கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்டத்துக்கான சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுவால், விஸ்வமடுவில் நிர்மாணிக்கப்பட்ட விருந்தினர் விடுதி நேற்று திங்கட்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்ட சிவில் பாதுகாப்பு படைகளின் பொறுப்பதிகாரி றியல் அட்மிரல் ஆனந்த பீரிஸ், இந்த விருந்தினர் விடுதியை திறந்து வைத்தார்.

கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுவின் 2 ஆவது ஆண்டு நிறைவையொட்டியே இந்த விருந்தினர் விடுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்நிகழ்வில் சிவில் பாதுகாப்பு குழுவிலுள்ளவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள், மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்புத்திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் திட்டங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிவில் பாதுகாப்பு குழுவின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .