2021 மார்ச் 08, திங்கட்கிழமை

சிறாட்டிக்குளம் கிராமத்திற்கு மின்இணைப்பு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 21 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு, சிறாட்டிக்குளம் கிராமத்துக்கான மின் இணைப்பு வேலைகள் 25.5 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார்.

மேற்படி கிராமத்தில் 54 குடும்பங்கள் வரையில் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதி மக்கள் தங்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் அதற்கான தேவையை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்நிலையில், தங்கள் பகுதிக்கு மின்சார வசதிகள் செய்து தரும்படி இப்பகுதி மக்கள் அடிக்கடி கோரிக்கைகள் விடுத்து வந்தனர்.

கோரிக்கைக்கமைய வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் மேற்படி கிராமத்திற்கு மின்சார விநியோகம் மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .