2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிளால் மாணவனை மோதிய இருவர் கைது

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 28 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட மாணவனொருவரை மோட்டார் சைக்கிளால் மோதி காயப்படுத்திய இருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று இன்று செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்றது.

இந்த விபத்தில் காயமடைந்த உரும்பிராய் பிரதேச கல்லூரியொன்றைச் சேர்ந்த 13 வயது மாணவன், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (28) மதியம், பாடசாலை முடிவடைந்த நிலையில் மேற்படி மாணவன் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், அவ்வழியால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளொன்று மாணவனை மோதியுள்ளது.

இதன்போது, பாடசாலை ஆசிரியர்கள் ஒன்றுகூடி மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை மடக்கி பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .