2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

பருத்தித்துறையிருந்து கொழும்புக்கு விசேட பஸ் சேவை

Kogilavani   / 2014 ஒக்டோபர் 30 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

பருத்தித்துறையிலிருந்து கொழும்புக்கு புதிய விசேட பஸ் சேவையொன்று புதன்கிழமை (29) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சாலை முகாமையாளர் கந்தப்பு கந்தசாமி   வியாழக்கிழமை (30) கூறினார்.

இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ்ஸொன்றே இவ்வாறு சேவையில் ஈடுபடுகிறது.

அச்சுவேலியிலிருந்து மாலை 7 மணிக்கு புறப்படும் இந்த பஸ்,  உடுப்பிட்டி, தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நெல்லியடி, கொடிகாமம், புத்தளம் ஊடாக கொழும்பை சென்றடைகின்றது.

இதேபோல், கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் இந்த பஸ் அதே வழியாக அச்சுவேலியை வந்தடையும்.
இந்த சேவை நடத்துவதற்குரிய முழு அனுமதியையும் இலங்கை போக்குவரத்து சபை ஊடாக தாம் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .