2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மகளை தாக்கிய தந்தையை மனநோய்ச் சிகிச்சைக்கு உட்படுத்துமாறு உத்தரவு

George   / 2015 ஜனவரி 28 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா


யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில், பாடசாலை மாணவியொருவரைத் தாக்கி அவரை படுகாயமடையச் செய்த மாணவியின் தந்தையை மனநோய்ச் சிகிச்சைக்கு உட்படுத்துமாறு இளவாலைப் பொலிஸாருக்கு யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, புதன்கிழமை (28) உத்தரவிட்டார்.
 
சந்தேகநபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் பணித்தார்.
 
மதுபோதையில் செவ்வாய்க்கிழமை (27) வீட்டுக்குச் சென்ற தந்தை, படித்துக்கொண்டிருந்த மகளை அழைத்து கட்டையால் காலில் தாக்கியுள்ளார். 

இதில் காயமடைந்த         பாடசாலை மாணவி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
 
விசாரணைகளை மேற்கொண்ட இளவாலை பொலிஸார், தந்தையை புதன்கிழமை (28) கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .