2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கௌதாரிமுனை மணல் அகழ்வு தடுப்பு

Menaka Mookandi   / 2015 ஜனவரி 29 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

முறையற்ற வகையில் அனுமதி பெறப்பட்டு பூநகரி, கௌதாரிமுனை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த மணல் அகழ்வு நடவடிக்கை வடமாகாண விவசாய மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இது தொடர்பில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 'பூநகரி கௌதாரிமுனை பகுதியில் மணல் அகழ்வதற்கான அனுமதி பிரதேச செயலம் மற்றும் சுற்றாடல் அதிகார சபை ஆகியவற்றின் அனுமதியில்லாமல் நேரடியாக புவிச்சரிதவியல் அனுமதி பெறப்பட்டுள்ளது' என்றார்.

'மணல் அகழ்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்ட உயிலங்காடு என்னும் இடத்தில் மணல் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் கௌதாரிமுனை, மண்ணித்தலை என்னும் இடத்தில் முறையற்ற விதத்தில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு சென்று படிவங்களை பரிசோதனை செய்து, மணல் அகழ்வு நடவடிக்கையை தடுத்து நிறுத்தியதாக' அமைச்சர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .