2021 மே 18, செவ்வாய்க்கிழமை

யாழில் பாரிசவாத நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Menaka Mookandi   / 2015 ஜனவரி 30 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ்.போதனா வைத்தியசாலையில் பாரிசவாத நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்திய கலாநிதி கே.அஜந்தா வெள்ளிக்கிழமை (30) தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த மாதம் மாத்திரம் 30 நோயாளிகள் பாரிசவாத நோயால் இனங்காணப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

அதிகமான நோயாளிகள் நோயின் தாக்கம் அதிகரித்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு வருகின்றனர். நோய்த் தாக்கம் அதிகரித்த நிலையில் வருவதால் நோயை முற்றாக குணப்படுத்துவதில் தாமதம் ஏற்படுகின்றது.

பாரிசவாத நோய்க்குரிய அறிகுறிகள் தென்படும் போதே வைத்தியரை நாடுவதன் மூலம் விரைவில் சிகிச்சையை பெற்றுக்கொள்வதோடு பூரண குணமடையும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .