George / 2015 ஜனவரி 31 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொ.சோபிகா
மக்களின் கோரிக்கையை ஏற்று பேருந்து சேவைகளை மேற்கொள்ள பேருந்து சாலைகளில் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாக யாழ். பிராந்திய செயலாற்றல் முகாமையாளர் ஏ.கேதீசன், சனிக்கிழமை (31) தெரிவித்தார்.
மாதகல், கீரிமலை ஆகிய இடங்களில் இருந்து பண்டத்தரிப்பு சித்தங்கேணி, சங்கானை, மானிப்பாய் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு செல்லும் 787, 788 இலக்க சேவைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பாக அவரை தொடர்பு கொண்டு கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னய காலங்களில் பேருந்து பற்றாக்குறை காணப்பட்டிருந்த போதும் அப்பிரச்சினை தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ஆளனிப்பற்றாக்குறை நிவர்த்திசெய்யப்படவில்லை. அதிலும் சாரதிகள் பற்றாக்குறை அதிகமாக காணப்படுகின்றது. அதன் காரணமாக 10 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படாமல் உள்ளன.
பல பகுதிகளுக்கு ஒரு பேருந்தே சேவையில் ஈடுபடுகின்றது. 2 அல்லது 3 சேவைகளை வழங்குவதற்கு பேருந்துகள் இருக்கின்ற போதிலும் சாரதிகள் பற்றாக்குறையால் சேவையை வழங்க முடியாதுள்ளது.
ஆளனிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்தால் மட்டுமே அனைத்து இடங்களுக்கும் நிறைவான சேவையை வழங்க முடியும் என அவர் மேலும் கூறினார்.
8 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
26 Oct 2025