2021 மே 18, செவ்வாய்க்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் கொண்டு சென்ற இருவர் கைது

Thipaan   / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

அனுமதிப்பத்திரமின்றி முச்சக்கரவண்டியில் மதுபானம் கொண்டு சென்ற இரண்டு சந்தேகநபர்களை திங்கட்கிழமை (02) கைது செய்ததாக, நெல்லியடிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.சுமித் பெரேரா தெரிவித்தார்.

நெல்லியடியிலிருந்து வல்வெட்டித்துறை ஆதிகோவில் பகுதிக்கு கொண்டு சென்றபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 175 மில்லிலீற்றர் கொள்ளவுள்ள 200 மதுபான போத்தல்களும் 24 ரின்பியர்களும் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை (03) மற்றும் புதன்கிழமை (04) ஆகிய தினங்களில் அதிக விலையில் விற்பனை செய்யும் நோக்கில், மதுபான போத்தல்களை கொண்டு சென்றபோது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொறுப்பதிகாரி கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .