2021 மே 15, சனிக்கிழமை

பொருளாதார, மத ரீதியிலான மாற்றங்கள் ஏற்படும்

Kogilavani   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்


எதிர்வருங் காலங்களில் நடைபெறும் சுதந்திர தினத்தில் பொருளாதார மற்றும் மத ரீதியான மாற்றங்கள் ஏற்படும் என நம்புவதாக யாழ்.மாவட்ட மேலதிக செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் தெரிவித்தார்.


யாழ்.மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற இலங்கையில் 67 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,


'நல்லாட்சியில் சமூக, பொருளாதார மாற்றங்கள் ஏற்படுவதற்கு எல்லோரும் இணைந்து செயற்பட்டு, ஒரு மறுமலர்ச்சியை நாட்டில் ஏற்படுத்தவேண்டும். பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் இலங்கையில் வீதி, ரயில் பாதை என பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


சுதந்திரத்தின் பின்னரும் இந்த அபிவிருத்திகள் தொடர்ந்து நடைபெற்று நாடு மெருகூட்டப்பட்டு வருகின்றது. சுதந்திரத்துக்காக பாடுபட்ட வீரர்களை நினைவுகூறுவதும் அவசியமானது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .