2021 மே 15, சனிக்கிழமை

வடமாண சபையின் வாகன கொள்வனவு நிதி, அங்கவீனமுற்றோரின் புனர்வாழ்வுக்கு

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் வாகன கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்ட 51 மில்லியன் ரூபாயில் குறைந்தது 40 மில்லியன் ரூபாயை பிறப்பிலும், போரினாலும் அங்கவீனமுற்றோரின் புனர்வாழ்வுக்காக பயன்படுத்தவுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் வெள்ளிக்கிழமை (06) தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிறப்பிலும், போரினாலும் அங்கவீனமுற்றோரின் புனர்வாழ்வு தொடர்பாக கடந்த வருடம் ஒக்ரோபர் 21ஆம் திகதி எம்மால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை சில கணக்கியல் சிக்கல் காரணமாக நடைமுறைப்படுத்த முடியவில்லை.

2015ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் வாகன கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்ட 51 மில்லியன் ரூபாய் நிதி மூலம் பிறப்பிலும், போரினாலும் அங்கவீனமுற்றோருக்கு தலா ஒரு இலட்சம் வீதம் 400 குடும்பங்களுக்கு வாழ்வாதார மூலதனமாக ஒதுக்க முடியும்.

ஏற்கனவே உள்ள வாகனங்களை விட கடந்த வருட இறுதியில் கொள்வனவு செய்த 13 வாகனங்களும் மாகாண சபையை வந்தடையவுள்ளன. எனவே தற்போதுள்ள வாகனங்களை கவனத்துடன் பராமரித்தால் தேவைகளுக்கு போதுமானதாக உள்ளது. மேலும் தற்போதைய மத்திய அரசாங்கத்தின் கொள்ளையும் வாகன கொள்வனவு தவிர்ப்பு ஆகும்.

எனவே இனிமேல் வாகனத்தேவை முன்வைக்கப்படின் அது பற்றி முழுமையான மதிப்பீடு செய்யப்படும் என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .