Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Princiya Dixci / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-யோ.வித்தியா
நெடுந்தீவு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட இடங்களில் அனர்த்த முகாமைத்துவ செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாக நெடுந்தீவு பிரதேச சபைச் செயலாளர் எஸ்.சிறீ, வெள்ளிக்கிழமை (06) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டு வைகாசி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை 1300 குடும்பங்களுக்கு வரட்சிக்கால குடிநீர் வழங்கப்பட்டது. அத்துடன், வனஜீவராசிகள் திணைக்களத்தின் உதவியுடன் குதிரைகள், ஏனைய கால்நடைகள் என்பவற்றுக்காக அமைக்கப்பட்ட தொட்டிகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டது.
ஐயனார் கோயில், சாரப்பிட்டி, மணல்தறை மற்றும் வெட்டுகாடு ஆகிய பகுதிகளில் உள்ள கிணறுகளும் மணல்தறை கேணியும் கடந்த வருட இறுதியில் புனரமைக்கப்பட்டன.
அனர்த்த முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு மற்றும் பின்னரான அனர்த்த செயற்பாடுகள் என்பன தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago