Menaka Mookandi / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட இத்தாவில் ஆரம்ப சுகாதார நிலையத்தை மீள அமைத்து சொந்த கட்டிடத்தில் நடைபெற வைப்பது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பளை சுகாதார வைத்தியதிகாரி செல்வி மைதிலி சிவானந்தன் செவ்வாய்க்கிழமை (10) தெரிவித்தார்.
யுத்தம் காரணமாக முழுமையாக அழிவடைந்த நிலையில் காணப்படும் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் அழிவுகளுக்கு முன்னர் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு சேவையை வழங்கியிருந்தது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சுற்றி மிதிவெடிகள் அகற்றப்பட்டு மிதிவெடிகள் இல்லையென்ற உறுதிப்பாடு வழங்கப்பட்ட நிலையில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடத்தை மீள அமைத்து சொந்த இடத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு இத்தாவில், அரசர்கேணி, கச்சார்வெளி, செல்வபுரம், வேம்பொடுகேணி, இந்திராபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பில் பளை சுகாதார வைத்தியதிகாரி கூறுகையில், 'மேற்படி பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அழிவடைந்த நிலையில் உள்ளது. இந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையமொன்று அமைக்கப்படுமானால் மேற்படி கிராமங்களின் மக்கள் பயனடைவார்கள். தற்போது ஆரம்ப சுகாதார நிலைய செயற்பாடுகள் ஒரு பொதுமண்டபத்தில்தான் இத்தாவில் பகுதியில் நடைபெறுகின்றதாக' கூறினார்.
9 minute ago
19 minute ago
33 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
33 minute ago
45 minute ago