Menaka Mookandi / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொ.சோபிகா
யாழ்.மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்தியதிகாரி பணிமனைகளில் பணிபுரியும் சமூக சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக்கோரி சுகாதார அமைச்சின் பணிமனைக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (10) அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் செய்தனர்.
போராட்டத்தில் கலந்துகொண்ட சுகாதார தொண்டர்கள் இது தொடர்பில் கூறுகையில், 'யாழ் .மாவட்டத்திலுள்ள 12 சுகாதார வைத்தியதிகாரி பணிமனைகளில் 10 வருடங்களுக்கும் மேலாக சுகாதார தொண்டர்களாக பணிபுரிகின்றோம். ஆரம்ப காலத்தில் எமக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. 2012ஆம் ஆண்டுக்கு பின்னர் 6,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 3 மாதங்களாக சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.
'234 சுகாதார தொண்டர்கள் தற்போது பணிபுரிகின்றோம். எமக்கு நிரந்தர நியமனம் வழங்கக்கோரி பலமுறை சுகாதார அமைச்சுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். இதுவரையில் சாதகமான முடிவு கிடைக்கவில்லை. ஆகையால் இன்று அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துகின்றோம்.
வடமாகாண சுகாதார அமைச்சரின் செயலாளர் ஆர்.ரவீந்திரனிடம் இது தொடர்பாக முறையிட்ட போது, உங்களுடைய விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன, அனுமதி கிடைத்தவுடன் நிரந்தர நியமனம் வழங்குவோம் என அவர் கூறியதாக' தொண்டர்கள் கூறினர்.
42 minute ago
48 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
48 minute ago
3 hours ago