Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
வாழ்வாதார வசதி குறைந்த பொதுமக்களுக்கு வழங்குவதற்காக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் காரைநகர் பிரதேச செயலகத்தில் வைக்கப்பட்டுள்ள மீன்பிடி வலைகள், தையல் இந்திரங்கள் மற்றும் துவிச்சக்கரவண்டிகள் ஆகியன இன்னமும் பயனாளிகளிடம் கையளிக்கப்படவில்லை என காரைநகர் பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவர் வீரமுத்து கண்ணன் புதன்கிழமை (11) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், 'இந்த உபகரணங்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லையென அதற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் என்னிடம் அதிருப்தி தெரிவித்தனர்' என்றார்.
'இந்த உபகரணங்களுடன் சேர்த்து வந்திருந்த கோழிக்கூடு மற்றும் சமையல் பாத்திரங்கள் என்பன 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. ஏனைய பயனாளிகளுக்கான வாழ்வாதார பொருட்களை வழங்காது அதிகாரிகள் மறுத்து வருவது ஏன் என்பது புரியாத புதிராகவேயுள்ளது.
பொருட்களை பெற்றுக்கொள்ள பயனாளிகள் இருதடவைகள் பிரதேச செயலகத்துக்கு அழைக்கப்பட்டு, மறுஅறிவித்தல் தருவதாக கூறி திருப்பி அனுப்பிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் அரச அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு' அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago