Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொ.சோபிகா
வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களங்களுக்கு மத்திய கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் வழங்கிய வாகனங்களை வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், புதன்கிழமை (10) கையளித்தார்.
வடமாகாணத்திலுள்ள ஒட்டுசுட்டான், கிளிநொச்சி, மடு, வேலணை, சாவகச்சேரி, மருதங்கேணி, பூநகரி ஆகிய பிரதேச கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களங்களுக்கும் வவுனியா கால்நடை உதவிப்பணிப்பாளர் அலுவலகத்துக்கும் தலா 1 வாகனம் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு வாகனமும் வரி இல்லாமல் தலா 3.5 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையவை. இது தொடர்பில் வடமாகாண விவசாய அமைச்சர் கருத்துக்கூறுகையில்,
பின்தங்கிய கிராமங்களிலுள்ள மக்கள், கால்நடை வைத்தியதிகாரிக்கு முறைப்பாடு செய்யும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக சென்று தமது சேவைகளை தொடரமுடியாத நிலையுள்ளது. இவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கால்நடை உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும்.
அதிகாரிகள் தமக்கு கொடுக்கப்பட்ட வாகனங்களை பேணி பாதுகாக்கப்பட்டதுடன் சிறப்பான சேவையை மக்களுக்கு வழங்கவேண்டும் என்றார்.
வடமாகாணத்தில் 34 கால்நடை வைத்தியதிகாரி பணிமனைகள் செயற்படுகின்றன. 17 வாகனங்கள் கையிருப்பிலுள்ளன.
வைத்தியர்கள் தமது சேவைகளை வழங்குவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். மேலதிக வாகன ஒதுக்கீட்டை மத்திய அரசுடன் கலந்துரையாடி வடமாகாண சபை எமக்கு பெற்றுத்தரவேண்டும் என வடமாகாண சுகாதார கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களப் பணிப்பாளர் எஸ்.வசீகரன் வேண்டுகோள் விடுத்தார்.
வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம், அரியகுட்டி பரஞ்சோதி, வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
53 minute ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
4 hours ago
5 hours ago
6 hours ago