2021 மார்ச் 01, திங்கட்கிழமை

யாழ். பொலிஸார் இருவர் கடமையில் இருந்து தற்காலிக இடைநிறுத்தம்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 02 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பொலிஸ் நிலைய இரு பொலிஸார் கடமையில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் என யாழ் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.சுஜிவன் மற்றும் சாயன் தென்னக்கோன் ஆகியோரே இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

யாழ். அரியாலை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வை கண்காணிப்பதற்காக வெள்ளிக்கிழமை (31) யாழ்.பொலிஸ் நிலையத்திலிருந்து பொலிஸ் குழுவினர் சென்றுள்ளனர்.

அதேநேரம், பொலிஸாரின் வெளிச்செல்லும் பதிவேட்டில் கையொப்பமிடாது, குறித்த இரு பொலிஸாரும் சென்றுள்ளனர்.
அனுமதியின்றி குறித்த இடத்துக்கு வந்ததாக இருவர் மீதும் மற்றைய குழுவினர் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் இரு பொலிஸாரும் சனிக்கிழமை (01) தற்காலிகமாக கடமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .