2021 மார்ச் 01, திங்கட்கிழமை

உறவினர் வீட்டில் விருந்து; அயல்வீட்டில் கைவரிசை

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வேலணை 6ஆம் வட்டாரப் பகுதியில் உறவினர் வீட்டுக்கு விருந்து சென்று அயல்வீட்டில் இருந்த பொருட்களைத் திருடிய சந்தேகநபர் ஒருவரை இன்று திங்கட்கிழமை (03) கைது செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரியைச் சேர்ந்த சந்தேகநபர் கடந்த 1 ஆம் திகதி வேலணைப் பகுதியிலுள்ள உறவினர் வீட்டுக்கு விருந்துக்குச் சென்றுள்ளார். அயல் வீட்டில் வயோதிப் பெண்ணொருவர் தனித்திருந்த வேளையில், அந்த வீட்டுக்குச் சென்று அங்கிருந்த இரண்டு பாட்டுப் பெட்டிகள் மற்றும் டி.வி.டி. பிளையர் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் பொருட்களின் உரிமையாளரான இளைஞர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபர் பொருட்களை சாவகச்சேரிக்கு கொண்டு செல்வதற்காக திங்கட்கிழமை பஸ்ஸூக்காக காத்திருந்த வேளையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .