Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 06, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
கடந்த காலங்களில் இடம்பெற்றதைப் போன்று தேர்தல் வன்முறைகள் மற்றும் விதிமுறை மீறிய செயல்கள் தற்போது நடைபெறுவதில்லையென கபே அமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன், திங்கட்கிழமை (10) தெரிவித்தார்.
யாழ்.கிறிஸ்தவ வாலிபர் சங்கக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இம்முறை வடக்கிலும் இலங்கையிலும் தேர்தல் சட்டங்கள் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றன. நாங்கள் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றோம். கடந்த 30 நாட்கள் தரவுகளின் படி இம்முறை தேர்தல் சட்டங்கள் சரியான முறையில் பின்பற்றப்படுவதாக உணர்கின்றோம்.
வாக்களார்களை பயமுறுத்தும் முறைமை முன்னர் வடக்கில் இருந்தது. ஆனால், தற்போது அது இல்லை. இம்முறை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இராணுவம் மற்றும் பொலிஸ் பயன்படுத்தப்படவில்லை. தேர்தல் கண்காணிப்பாளர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் காணப்படுகின்றது.
வாகனங்களில், சுவர்களில் சுவரொட்டிகளை ஒட்டுகின்ற செயற்பாடுகள் கடந்த காலங்களைவிட தற்போது குறைவாகக் காணப்படுகின்றது. இதுவரையில் 512 பேர் தேர்தல் விதிமுறைகள் மீறிய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
06 Mar 2021
06 Mar 2021
05 Mar 2021