2026 மே 01, வெள்ளிக்கிழமை

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மே தின நிகழ்வு

Editorial   / 2026 மே 01 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

.சக்தி  


பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், இலங்கைத் தமிழரசுக்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தின நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பட்டிப்பளையில் நடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளை மற்றும் பட்டிப்பளைக் கிளையின் ஏற்பாட்டில், பட்டிப்பளைக் கிளையின் தலைவர் அ. கருணாகரன் தலைமையில் இந்நிபு நிகழ்வு நடைபெற்றது. இதனை முன்னிட்டு, கொக்கட்டிச்சோலை சந்தியிலிருந்து ஆரம்பமான மே தின ஊர்வலம் பட்டிப்பளை விளையாட்டு மைதானம் வரை சென்றது.

இந்த ஊர்வலத்தில் மே தினத்தைச் சிறப்பிக்கும் வகையிலான பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் பேரணியாக வந்தனர். இதில் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினர், விவசாய அமைப்புகளின் உறுப்பினர்கள் ஆகியோர் தமது முச்சக்கர வண்டிகள் மற்றும் உழவு இயந்திரங்களுடன் அணிவகுத்து வந்தனர். மீனவர்களும் தமது படகுகளை அணிவகுப்பாகக் கொண்டு இப்பேரணியில் கலந்துகொண்டனர்.

ஊர்வலத்தைத் தொடர்ந்து, பட்டிப்பளை விளையாட்டு மைதானத்தில் பிரதான நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், டாக்டர் இ. சிறிநாத், க. கோடீஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு அமைப்புகளின் பிரகடன உரைகள் நிகழ்த்தப்பட்டதுடன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியினரால் மே தினப் பிரகடன உரையும் நிகழ்த்தப்பட்டது. இன்றைய நிகழ்வின்போது, வழக்கத்திற்கு மாறாக பட்டிப்பளை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், பெருமளவான பொலிஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .