2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

வெற்றிலை உண்டால் புற்றுநோய் வரும் என்பதால் விலகிவிட்டோம்: ஈ.பி.டீ.பி

Gavitha   / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

குணசேகரன் சுரேன்

வெற்றிலை உண்டால் புற்றுநோய் ஏற்படுவது போல வெற்றிலையில் தொடர்ந்து இருக்க முடியாத வகையில் வெற்றிலையுள்ளதால் அதில் இருந்து விலகி தமிழ் மக்களின் நாதமாகிய வீணையில் போட்டியிடுகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் இரா.செல்வ வடிவேல் தெரிவித்தார்.

யாழ். நகரப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'வெற்றிலையில் (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) இருந்த நாம் ஏன் விலகி தனித்து போட்டியிடுகின்றோம் என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. வெற்றிலை கூடாது என்பதை உணர்ந்த நிலையிலிலேயே அதிலிருந்து விலகினோம்' என்றார்.

' நல்லவர்களுக்கு உங்கள் வாக்குகளைச் செலுத்துங்கள் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அவர் கூறிய நல்லவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரே ஆவர்.

ஆலயங்களில் சமயப் பிரசங்கங்கள் செய்து வந்த என்னை, அரசியலுக்கு வரவழைத்த தற்போதுள்ள தமிழ் அரசியல்வாதிகள், என்னையும் அரசியல் பேச வைத்துவிட்டார்கள்' என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .